சூலூர்: சூலூரில் ராகவேந்திர சுவாமி ஆராதனை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலூர் கலங்கல் ரோட்டில் உள்ள ராகவேந்திர சுவாமி மூல மிர்த்திகா பிருந்தாவன் பிரசித்தி பெற்றது. இங்கு, சுவாமியின், 351 வது ஆராதனை விழா கடந்த ஐந்து நாட்களாக நடந்தது. குரு வார ஆராதனை, பூர்வாராதனை, மத்தியாராதனை, உத்ராராதனை சோமவார ஆராதனை நடந்தது. ராகவேந்திர சுவாமிக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ராகவேந்திர சுவாமி சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.