பழநி முருகன் கோயிலில் ஆவணி மாத பிறப்பு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2022 07:08
பழநி: பழநி மலைக்கோயிலில் ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி, முருகன் மலைக்கோயிலில் ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.