பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆஞ்ச நேயர் கோவிலில் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி அன்சாரி வீதியில், பிரசித்தி பெற்ற சிவராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், 6ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை, 7:00 மணி முதல் சிறப்பு ஹோமம், அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை மாலை சாற்றப்பட்டது. ஆஞ்சநேயர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.