திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி விழா ஆக.31ல் கொண்டாடப்படுகிறது.இதற்காக சிவசேனா சார்பாக திண்டுக்கல் ஆத்துார் வக்கம்பட்டி அருகில் மாநில அமைப்பாளர் பாலாஜி தலைமையில், மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்செல்வன் மேற்பார்வையில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தமிழ்செல்வன் கூறுகையில், மாவட்டம் முழுவதும் சிவசேனா சார்பாக 300க்கு மேற்பட்ட சிலைகள் வைக்க உள்ளோம். சிலைகள் தேங்காய் நார், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மூலம் தயார் செய்யப்படுகிறது. வீட்டில் வைத்து வழிபட 1 அடி சிலைகளும், பொது இடங்களில் வைக்க 2 முதல் 9 அடி சிலைகளும் தாயாரிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டாக கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா தடைபட்ட நிலையில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட மக்கள் உற்சாகமாக சிலைகள் கேட்டு வருகின்றனர், என்றார்.