திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், அக்., மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளமான www.tirupatibalaji.ap.gov.inல் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் விதமாக, ஏழுமலையான் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன்படி இன்று 9: ௦௦ மணிக்கு அக்., மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடபட்டது. வரும் செப்., 27ம் தேதி முதல் அக்.,5ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால் அந்நாட்களில் தர்மதரிசனத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பிரம்மோற்சவ தேதிகளில் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் வைத்து, அதன்படி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.