ஆக்ரா, பீஹார், மஹாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2022 09:08
ஆக்ரா : கிருஷ்ண ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு அவர் தந்தை வசுதேவரை போல வேடமிட்ட பக்தர், கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தையை கூடையில் வைத்து தலைமேல் சுமந்த படி யமுனை ஆற்றை கடந்து வந்து ஆக்ரா பக்தர்கள் வழிபாடு செய்தனர். உ.பி., பீஹாரின் பாட்னாவில் உள்ள , கிருஷ்ண பக்த இயக்கமான, ‘இஸ்கான் ’ அமைப்பினருக்கு சொந்தமான கோவிலில், கிருஷ்ணர் சிலைக்கு பக்தர்கள் நேற்று அபிஷேகம் செய்து வழிபட்டனர். கிருஷ்ண ஜெயந்தியின் போது நடத்தப்படும் பிரசித்தி பெற்ற உறியடி விளையாட்டு, மஹாராஷ்டிராவின் மும்பையில் நேற்று நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.