சூலூர்: ஆடி மாத கடைசி வெள்ளியை ஒட்டி, செங்கத்துறை மாகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சூலூர் அடுத்த செங்கத்துறை மாகாளியம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு, அலங்கார பூஜைகள் நடந்தன. ஐந்தாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி, நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கிருத்திகை பூஜை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.