பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா விமர்சையாக நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, 7:00 மணிக்கு அபிஷேக பூஜை, மதியம், 12:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடந்தது. மதியம், 2:00 மணிக்கு உறியடி நிகழ்ச்சியும், மாலை, 3:00 மணிக்கு வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சியும், நடந்தது. மாலை கிருஷ்ணர் திருவீதி உலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை பன்னிமடை இறைவழிபாட்டு மன்றம், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.