பரங்கிப்பேட்டை ; பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஆஞ்சநேயர் கோவிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோபூஜை பெருவிழா நடந்தது. ராம அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளை மற்றும் அகஸ்தியம் பவுண்டேஷன் சார்பில் நடந்த விழாவிற்கு அறக்கட்டளை நிர்வாகி ராமதாஸ் தலைமை தாங்கினார். கோ பூஜை பெருவிழாவை, அகஸ்தியம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ஈஸ்வர் ராஜலிங்கம், அர்ச்சனா ஈஸ்வர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.கோபூஜையில், 200க்கும் மேற்பட்ட பசுமாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ரங்காச்சார்யார், கோகுலாச்சார்யார், முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிவேல், உத்திராபதி உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.