உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே களக்குடி கோகுலபுரத்தில் கிருஷ்ணன் 30 ஆம்ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. நேற்று முன்தினம் பாமா, ருக்மணி சமேத கோகுல கண்ணன் கோயிலில் சங்க கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கண்ணபிரான் பிறந்ததை முன்னிட்டு மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வானவேடிக்கைகள் நடந்தது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் உற்ஸவர் வெளிப்பிரகார வீதி உலாவும், மாலை 4 மணியளவில் உறியடி உற்ஸவம், 5 மணி அளவில் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.