ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி : சுவாமிகள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2022 07:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுவாமிகள் வீதி உலா, உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் ஆண்டாள் கோவிலில் இருந்து கிருஷ்ணர், ருக்மணி, சத்தியபாமா ஆகியோர் கிருஷ்ணர் கோயிலுக்கு எழுந்தருளினர். அங்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து கோயிலுக்கு திரும்பினர். அங்கு சுதர்சன் பட்டர் ஸ்ரீ ஜெயந்தி புராணம் வாசித்தார். இதை தொடர்ந்து இரவு 12:05 மணிக்கு கிருஷ்ணர் பிறப்பு வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று இரவு 07:00 மணிக்குமேல் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள், கிருஷ்ணர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர். அப்போது ரத வீதிகளில் உறியடி உற்சவமும், கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.