திருப்பதி,திருமலை திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில், அக்., மாதத்திற்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, 60 நாட்களுக்கு முன்பு பதிவு செய்யும் விதமாக ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை இணையத்தில் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. இதன்படி அக்., மாதத்திற்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள், நாளை காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. ஆர்ஜித சேவாவிற்கு தொடர்புடைய வேறு சில டிக்கெட்டுகள் நாளை மதியம் 2:00 மணிக்கும், வீட்டிலிருந்தபடியே கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபாலங்கார சேவை ஆகியவற்றில் கலந்து கொள்வதற்கான சேவா டிக்கெட்டுகள், மாலை 4:00 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. இதற்காக பக்தர்கள் www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.