சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இந்து அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. சிங்கம்புணரி விசுவ ஹிந்து பரிசத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று கிருஷ்ணர் ஊர்வலம் நடந்தது. சிறுவர் பூங்கா விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சேவுகப்பெருமாள் கோயிலை அடைந்தது. அங்கு நடந்த ஆன்மீக கூட்டத்திற்கு பஜ்ரங்கள் மாவட்ட அமைப்பாளர் தங்கபாண்டி தலைமை வகித்தார். மாநில சேவா நிர்வாகி கருப்பன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகசெல்வம் வரவேற்றார். வி.ஹச்.பி., முன்னாள் மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, ஆர் எஸ்.எஸ்., ஒன்றிய தலைவர் குகன் பேசினர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அழகப்பன், பாலசுப்பிரமணியன், கார்த்தி, சந்தோஸ், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.