திருத்தணி: கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில் நேற்று, மூலவருக்கு, காலை 8:00 மணிக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மதிய ஆரத்தி நடந்தது.மாலை 6:00 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், உற்சவர் சாய்பாபா கோவில் வளாகத்தில் உட்புறத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.