செந்துறை: நத்தம் அருகே சேத்துார் ஊராட்சி அரவங்குறிச்சி கரையம்மன், மலையம்மன், முத்துக் கருப்பண சுவாமி கோயில்களில் புரவி எடுப்பு திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவையொட்டி ஆக.24 ல்காப்பு கட்டுதல், சுவாமி அலங்காரம், வானவேடிக்கையுடன் அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன் தினம் கரையம்மன், மலை அம்மனுக்கு பொங்கல் வைத்து ஆடுகள் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முத்துக்கருப்பணசுவாமிக்கு குதிரை எடுப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோயில் வீட்டிலிருந்து மேளதாளம் முழங்க மாலை எடுத்துவரப்பட்டது. சர்வ அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருள மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அதிர்வெட்டுகள் முழங்க சுவாமி பூஞ்சோலை செல்லுதலும் நடந்தது.