ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோயில் கிடாய் வெட்டு விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டு, கறி விருந்து அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக மூலவர் காளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, அம்மன் துதி பாடல்கள் பாடப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. நடைபெற்ற கறி விருந்து அன்னதானத்தில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.