மேலூர்: மேலுாரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் கோயிலில் ஆக.17 காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று கோமாதா பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இன்று(ஆக.28) நேர்த்திக் கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகமும், உறியடி நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை ரத ஊர்வலத்தில் கிருஷ்ணர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.