ஸ்ரீவி., வைத்தியநாதசுவாமி கோயிலில் ரூ.64 லட்சத்தில் திருப்பணிக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2022 01:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில், உபயதாரர் நிதியிலிருந்து ரூ. 64 லட்சத்தில் திருப்பணிகள் செய்ய ஹிந்து அறநிலையத்துறை நிர்வாக அனுமதி மற்றும் தொழில் அனுமதி வழங்கி உள்ளது.
பழமை வாய்ந்த இக்கோயிலிலை பழுது பார்த்து புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரி வந்தனர். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தில் தமிழக கோயில் திருப்பணிகள் செய்வது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி தற்போது ரூ. 64 லட்சத்தில் திருப்பணிகள் செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ராஜகோபுரத்தில் ஏக வர்ணம் பூசுதல், சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி விமானங்களில் வர்ணம் பூசுதல், தட்டோடு பதித்தல், வெளிப்பிரகாரம், உட்பிரகாரத்தில் பழுது பார்த்து கல் பதித்தல், மதில் சுவர் பழுதுபார்த்தல், சிவகங்கை விநாயகர் தரைத்தளம் சீரமைத்தல், மூலிகை ஓவியங்கள் புதுப்பித்தல் போன்ற திருப்பணிகள் செய்ய தொழில்நுட்ப அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் உபயதாரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, காலதாமதமின்றி திருப்பணிகள் செய்ய கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.