குன்னூர்: குன்னூர் பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா கொடியேற்றம் நடந்தது. நீலகிரியின் வேளாங்கண்ணி என அழைக்கப்படும் குன்னூர் பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் திருவிழா வரும் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கேட்டில் பவுண்ட் பகுதியில் இருந்து கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு நேற்று மாலை, 5:30க்கு கொடியேற்றம் நடந்தது. ஊட்டி மறைமாவட்ட முதன்மை குரு அருட்திரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் கொடியேற்றி, திருப்பலியை நடத்தினார். குன்னூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். தினமும் நவநாள், திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை அந்தோனிசாமி, உதவி பங்குதந்தை ஆரோக்கிய சாமி தலைமையில் பங்குமக்கள், இளையோர் அன்பியங்கள் அருட் சபையினர் செய்து வருகின்றனர்.