காளஹஸ்தி நவசந்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2022 10:08
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயில்களான ( சன்னதிகள்) 4 மாட வீதிளில் வீற்றிருக்கும் நவசந்தி விநாயகர்களுக்கு இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி சாஸ்திர பூர்வமாக பட்டு வஸ்திரங்களையும் பூஜைப் பொருட்களையும் ஸ்ரீ காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி , மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் ஆகியோர் சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து பூஜை பொருட்களையும் பட்டு வஸ்திரங்களையும் தலை மீது சுமந்து ஊர்வலம் ஆக நான்கு மாட வீதிகளில் வீற்றிருக்கும் நவசந்தி விநாயகருக்கு அந்தந்த சன்னதியில் உள்ள அர்ச்சகர்களிடம் வழங்கினர். மேலும் 4 மாட விதிகளிலும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்களுக்கு வழங்கினர் .பட்டு வசுரங்கள் சமர்ப்பிக்கும் சமயத்தில் அகோராக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு விக்னேஸ்வரர்களுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்த பின்னர் ஸ்ரீ காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி மற்றும் பக்தர்களை ஆசிர்வாதம் செய்தனர்.