விநாயகர் சதுர்த்தி : போடி கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2022 10:08
போடி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போடியில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் நடந்தது.
போடி புதூர் சங்கரவிநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. கவுரவ தலைவர் வடமலைய ராஜையபாண்டியன் தலைமை வகித்தார். சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலித்தார். பொங்கல் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
* போடி அரசமரத்து விநாயகர் கோயில், குலாலர் பாளையம் விநாயகர் கோயில். போடி அணைப்பிள்ளையார் கோயில், சந்தைப்பேட்டை விநாயகர் கோயில், அக்ரஹாரா விநாயகர், அமராவதி நகர் விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பொங்கல் இட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
* போடி நகர இந்து முன்னணி, பா.ஜ., சார்பில் மெயின் ரோடு, வீடுகள் தோறும் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.