Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாய்பாபா - பகுதி 5 சாய்பாபா -பகுதி 7 சாய்பாபா -பகுதி 7
முதல் பக்கம் » சத்யசாய்பாபா - புட்டபர்த்தி
சாய்பாபா -பகுதி 6
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜன
2011
05:01

சத்யா தன் நண்பர்களிடம் அழகாக பதில் சொன்னான்.இது ஒன்றும் அதிசயமில்லை. நம் கிராம தேவதை ஒன்று இந்த பண்டங்களை எனக்கு தந்து கொண்டிருக்கிறது. அதை உங்களுக்கு தந்து கொண்டிருக்கிறேன், என்றான்.குழந்தைகள் அவனை தெய்வமாகவே நினைக்க ஆரம்பித்தனர். ஆனால் சத்யாவின் இந்த நிலை அவனுக்கு சாதகத்தை விட பாதகத்தையே நிறைய தந்தது. அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சத்யாவை அம்மா ஈஸ்வராம்பா கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.டேய் சத்யா! நீ இப்படியெல்லாம் செய்தா மாடு மேய்க்கத்தாண்டா போவே, அம்மா இவ்வளவு கடுமையான வார்த்தையை உதிர்த்து சத்யா கேட்டதே இல்லை. அவன் அம்மாவின் முகத்தை வருத்தத்துடன் ஏறிட்டு பார்த்தான்.அம்மா! நான் எந்தத்தப்பும் செய்யலையே?டேய்! பொய் சொல்றியா? இன்றைக்கு வகுப்பிலே ஆசிரியர் கொண்டப்பாவை என்னடா பண்ணினே? என்று அம்மா கேட்டதும் தான் சத்யாவுக்கு உறைக்க ஆரம்பித்தது. ஓ! அதுதான் அம்மாவின் கோபத்திற்கு காரணமா?அன்று வகுப்பறை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அந்தப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள். ஒருவர் கொண்டப்பா. இன்னொருவர் மகபூப்கான். மகபூப்கானுக்கு சத்யா மீது பிரியம் அதிகம். அவனுக்கு தான் கொண்டு வரும் இனிப்பு பண்டங்களைக் கொடுப்பார் அவர். ஆனால் சத்யா அதைச் சாப்பிட யோசிப்பான். அவர் ஒரு முஸ்லிம் என்பதால், வீட்டில் மாமிசம் சமைப்பார்கள். மாமிசம் சமைத்த பாத்திரத்தில் இந்த பண்டங்களையும் சமைத்திருப்பார்கள். எப்படி இதை சாப்பிடுவது? என்பது தான் சத்யாவின் தயக்கத்திற்கு காரணம். மகபூப்கான் இதைப் புரிந்து கொண்டார். ஒருநாள் தன் வீட்டை நன்றாக கழுவி, பெருக்கி, மெழுகி வீட்டை சுத்தமாக்கினார். புதுப்பாத்திரங்கள். புது எண்ணெய், புதிதாக மளிகைப் பொருள்கள் வாங்கி வீட்டில் பலகாரம் செய்யச் சொன்னார். அதை சத்யாவுக்கு எடுத்து வந்து கொடுத்தார்.

சத்யா! இன்று என் வீட்டை சுத்தமாக்கி, சுத்தமாக செய்து எடுத்து வந்த பலகாரம் இது. இதையாவது சாப்பிடேன், என்றார். ஆசிரியர் தன் மீது கொண்ட அன்பை எண்ணி வியந்தான் சத்யா. அது மட்டுமல்ல! சத்யா ஒரு சமயம் கடந்த தெய்வமாகவும் உருவாகி இருக்கிறான் என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது. ஆசிரியர் கொண்டப்பா கண்டிப்பானவர். தான் பாடம் சொல்லித்தரும் போது மாணவர்கள் வேறு எங்காவது கவனத்தை செலுத்தினால் அவருக்கு பிடிக்காது. ஒருநாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது சத்யா ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். கொண்டப்பா சத்யாவைக் கண்டித்தார்.சத்யா! நான் பாடம் நடத்தும் போது கவனிக்காம அங்கே என்ன செஞ்சுகிட்டிருக்கே! கொண்டப்பா சத்தம் போட்டார்.ஐயா! நான் இங்கே எழுதிகிட்டிருந்தாலும், நீங்க சொல்றதை கவனிச்சுகிட்டும் இருக்கேன். இதோ பாருங்க! பஜனை பாட்டு தான் எழுதிக்கிட்டு இருந்தேன்,.சத்யாவின் இந்த பதில் ஆசிரியரை எதிர்த்து பேசுவது போல் இருந்தது. அவருக்கு கோபம் அதிகமாகி விட்டது.சத்யா! செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்காம எதிர்த்தா பேசுறே! பெஞ்சு மேலே ஏறு! வகுப்பு முடியறவரைக்கும் நிக்கணும் புரியுதா! என்றார். சத்ய நாராயணன் அப்படியே செய்தான். அவன் தன் நண்பர்களுக்கு பஜனைப் பாடல்களை எழுதிக் கொடுப்பான். அதை வகுப்பு நேரத்திலேயே செய்வான். அதே நேரம் பாடங்களில் கோட்டை விட்டதில்லை. எல்லா பாடங்களை படிப்பதிலும் படுசுட்டி சத்யா.அடுத்த பீரியட் ஆரம்பமானது. கொண்டப்பா பக்கத்து வகுப்புக்கு கிளம்ப தயாரானார். மகபூப்கான் உள்ளே வந்தார். அவர் சத்யா பெஞ்சு மீது நிற்பதைப் பார்த்ததும் கலவரம் அடைந்தார்.தெய்வத்தை தண்டிக்கும் அதிகாரம் நமக்கேது! என பதறியபடியே சிந்தித்தவராய் நடந்த விஷயத்தை கொண்டப்பாவிடம் கேட்டார். கொண்டப்பா சொன்னதும், பரவாயில்லை, சிறுவன் தானே! தெரியாமல் செய்து விட்டான், விட்டு விடுங்கள், என கேட்டுக் கொண்டார்.

கொண்டப்பா மனம் இரங்கவில்லை. அவன் இன்று முழுவதும் நிற்கட்டும், என்றவர் நாற்காலியை விட்டு எழுந்தார். ஆனால் அவரால் எழ முடியவில்லை. வலுக்கட்டாயமாய் எழுந்த போது, நாற்காலியும் பின்பக்கமாய் ஒட்டிக் கொண்டு வந்தது.மகபூப்கான் நினைத்தது போலவே தான் நடந்தது. சத்யாவை பெஞ்சில் ஏற்றியதால், கொண்டப்பாவுக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொண்ட அவர், இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. குழந்தைகளெல்லாம் சிரித்தனர்.ஐயா! எங்கள் குருவை கீழே இறக்குங்கள். இல்லாவிட்டால் நாற்காலி உங்களை விடாது, என்றனர். மகபூப்கானும் இதையே சொன்னார்.வேறு வழியின்றி சத்யாவை இறங்கச் சொன்னார் கொண்டப்பா. சத்யா இறங்கவும், ஒட்டிய நாற்காலி கீழே விழுந்தது.காண்டப்பா ஆச்சரியப்பட்டார். இவன் மகான் தான், சந்தேகமே இல்லை, என மனதில் நினைத்து அவனை கருணை பார்வை பார்த்தபடி வெளியே சென்றார்.இந்த சம்பவம் வீட்டுக்கு தெரியாமல் இருக்குமா? சக சிறுவர்கள் சத்யாவின் அம்மாவிடம் போய் சொல்லி விட்டார்கள். அம்மாவுக்கு கடும் கோபம்.அதன் விளைவு தான், அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான் சத்யா. சத்யாவை கண்டித்து விட்டு, ஈஸ்வராம்பா தற்செயலாக வெளியே சென்றார். ஆசிரியர் கொண்டப்பாவை அவர் பார்த்தார். நடந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கெஞ்சும் தொனியில் கூறினார். ஆனால், கொண்டப்பா, அம்மா அப்படி சொல்லாதீர்கள். அவன் தெய்வம், நீங்கள் தெய்வத்தாய், என்று அக மகிழ்ந்து சொல்லவும் ஆச்சரியப்பட்டார் ஈஸ்வராம்பா.

 
மேலும் சத்யசாய்பாபா - புட்டபர்த்தி »
temple news

சாய்பாபா -பகுதி 1 நவம்பர் 10,2010

கிராமத்தில் இருந்த பசுக்கள் பால் கறக்க மறுத்தன. குழந்தைகள் பாலின்றி சிரமப்பட்டனர். அந்த ஊருக்கு ... மேலும்
 
temple news

சாய்பாபா - பகுதி 2 நவம்பர் 10,2010

ஈஸ்வராம்பாவுக்கு சற்று நடுக்கம். என்ன இது! இப்படி ஒரு தேஜஸான ஒளி...! இது ஏன் என்னை நோக்கி பாய்ந்து ... மேலும்
 
temple news

சாய்பாபா -பகுதி 3 நவம்பர் 11,2010

இனிமையான அந்த இசை எங்கிருந்து வந்தது என கொண்டமராஜூவுக்கு புரியவில்லை. அதே நேரம் ஈஸ்வரம்மாவின் கணவர் ... மேலும்
 
temple news

சாய்பாபா -பகுதி 4 நவம்பர் 11,2010

தொட்டிலில் படுத்திருந்த சத்யாவின் தலையில் வட்ட வடிவ ஒளி தகதகவென மின்னிக் கொண்டிருந்தது. பார்க்க கண் ... மேலும்
 
temple news

சாய்பாபா - பகுதி 5 நவம்பர் 11,2010

சாப்பாட்டையே தொடாத நெய் வாசனை சத்யாவின் கைகளில் இருந்து வந்தது ஈஸ்வராம்பாவுக்கு பெரும் ஆச்சரியமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar