Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை சீனிவாசா பெருமாள் ... கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
10ம் நுாற்றாண்டு கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
10ம் நுாற்றாண்டு கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

02 செப்
2022
07:09

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தாலுகா பண்ணப்பள்ளி கிராமத்தின் வடக்குப்புறும், ‘நிலவுக்கல்’ என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும், 10ம் நுாற்றாண்டு நுளம்பர் காலத்து கன்னட கல்வெட்டு கண்டறியப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முதுகலை இரண்டாமாண்டு வரலாற்றுத்துறை மாணவர்கள் இதை கண்டறிந்தனர்.

இது குறித்து, பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: இந்த நடுகல் கல்வெட்டு, 10ம் ஆண்டை சேர்ந்த நுளம்ப மன்னன் வீரா நுளம்பன் என்று அழைக்கப்படும் அன்னிகன் என்ற மன்னனின் காலத்து, கன்னடமொழி நடுகல் கல்வெட்டு. இதிலுள்ள வீரன் வலது கையில் வாள் ஏந்தியவாறும், இடதுகையில் வில் ஒன்று பிடித்தவாறும் உள்ளான். வீரனின் இடுப்பில் இடைவாள், கழுத்தில் அணிகலன்கள், கைகளில் காப்பு மற்றும் வளையங்கள் அணிந்துள்ளான். வீரனின் இடது கையின் மேல் பகுதியில் இரண்டு தேவதைகள், இறந்த வீரனை சொர்க்கத்துக்கு அழைத்து செல்வதுபோல் உள்ளது.  மேலும், ராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவன் என்ற மூன்றாம் கிருஷ்ணனின் படைத்தளபதியான அரகெல்லா என்பவர், இப்பகுதியில் படையெடுத்தபோது, அவருடன் எதிர்த்து போரிட்ட அன்னிகன் என்ற, வீர நுளம்ப மன்னனின் படைவீரர்களின் ஒருவரான பாலையா என்ற போர் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். அவருக்கு, அன்னிகன் என்ற வீர நுளம்பன், வீரத்தை போற்றி நிலம் தானமாக கொடுத்துள்ளான் என்ற செய்தியை, இந்த நடுகல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாலையாவின் குடும்ப உறுப்பினர்கள், அவர் வீரத்தையும், அரசன் கொடுத்த நில தானத்தையும் போற்றும் வகையில், இந்த நடுகல்லை எடுத்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar