பதிவு செய்த நாள்
02
செப்
2022
07:09
சூலூர்: அரசூர் பொன்னர் சங்கர் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த அரசூரில் உள்ள பொன்னர் சங்கர் ( அண்ணமார்) செல்லாண்டியம்மன், பெரிய காண்டியம்மன், மாயவர் உள்ளிட்ட கோவில்கள் பழமையானவை. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவுற்று, கும்பாபிஷேக விழா, கடந்த, ஆக.,30 ம்தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. முதல்கால ஹோமம் முடிந்து, அனைத்து தெய்வங்களுக்கும் அஷ்ட பந்தன மருந்து இடப்பட்டது. நேற்று முன்தினம் இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு செல்லாண்டி அம்மன், அண்ணமார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தச தானம், தச தரிசனம் மகா அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. வீரப்பூர் முத்தப்பா கலைக்குழுவினரின் பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாற்று நாடகம் நடந்தது. விழாவில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அண்ணமாரை வழிபட்டனர்.