சூபி ஞானிகளில் ஒருவராக ராபியா பஸ்வி என்ற பெண் இருந்தார். அவரிடம் தினந்தோறும் உரையாட சிலர் வருவார்கள். அவர்களுள் ஒருவர், இவர் பெண் தானே என மட்டம் தட்ட நினைத்தார். அவரிடம் ‘‘இறைவன் தன் துாதராக ஆண்களைத்தானே அனுப்பி வைத்துள்ளான். ஒரு பெண்ணைக் கூட அனுப்பவில்லையே’’ என்றார். அதற்கு ஞானியோ,‘‘அந்த இறை துாதர்களைப்பெற்று எடுப்பதற்கு பெண்களைத்தானே தேர்ந்தெடுத்துள்ளான் ’’ என பதிலடி கொடுத்தார். பெண்ணின் பெருமையை உணர்ந்த அவர் தலை குனிந்தார்.