பதிவு செய்த நாள்
09
செப்
2022
12:09
உத்தமபாளையம்: உத்தமபாளையம் யோகநரசிங்க பெருமாள் கோயிலில் வருஷாபிசேகம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் வருஷாபிசேகம் நடைபெற்றது. முதல் நாள் மாலை அனுஞ்ஞை, விஸ்வக் சேன ஆராதனை, சுதர்சன ஹோமம், உற்சவர் பெருமாள், தாயார்களுக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது.நேற்று காலை இரண்டாம் கால பூஜைகள் மற்றும் வருஷாபிசேக பூஜைகள், ஹோமம் துவங்கியது. காலை 7.10 மணியளவில் யோகநரசிங்கபெருமாள், மகாலட்சுமி தாயார், ஆண்டாள் நாச்சியார், மற்றும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும், பரிவார தேவதைகளுக்கும் வருஷாபிசேகம் நடைபெற்றது. பின் பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூ தேவிகளுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாளும், தாயார்களும் எழுந்தருளினர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை யோகநரசிங்க பெருமாள், உபய நாச்சிமார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். வீதிகளில் திரளான பெண்கள் நின்று பெருமாளை தரிசித்தனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஒம் நமோ நாராயணா பக்த சபை தலைவர் ஹரஹர அய்யப்பன், செயலாளர் ரவி உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஓம், நமோ நாராயண பக்த சபை உறுப்பினர்கள் ஞானவேல், அசோக், பாலமுருகன் உள்ளிட்ட பலர் இதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.