மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு ஸ்ரீ வீரபத்ர சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பு வீராசாமி நகர் வீரபத்ர சுவாமி திருக்கோவிலில் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவில் வளாகத்தில் வீரபத்திரர் சுவாமி, வலம்புரி விநாயகர், பாலமுருகன் நந்தியம்பெருமான் தட்சிணாமூர்த்தி துர்க்கை அம்மன் சப்த கன்னிமார் மற்றும் நூதன ஆலயமாக வீரு பண்ணம்மாள் சன்னதி, நவகிரக சன்னதி ஆகியவைகள் பஞ்சவர்ண கலாபகங்கள் தீட்டி புதிப்பொலிவு செய்யப்பட்டது. முன்னதாக 5ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சிகள் முளைபாலிகை இடுதல், முகூர்த்த கால் நடுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்று புனித தீர்த்த கலசங்கள், முளைப்பாரி எடுத்து வருதல் முதல் கால யாக பூஜைகள் இரண்டாம் கால யாக பூஜைகள் மூன்றாம் கால யாக பூஜைகள் எந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தனம், விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது. நேற்று நான்காம் கால யாக பூஜை பூரணாஹூதி நடைபெற்று தீர்த்த கலசங்கள் மங்கள வாத்தியம் முழங்க எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் தேவாங்க குல குரு ஹம்பி ஹேம கூட காயத்ரி பீடாதிபதி ஸ்ரீதயானந்தபுரி அருளாசி வழங்கினார். 10க்கும் மேற்பட்ட சாஸ்திரிகள் கோவில் அர்ச்சகர் சரவணகுமார் சாஸ்திரி ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். நிகழ்ச்சிக்கு தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே செல்வராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.