பதிவு செய்த நாள்
10
செப்
2022
08:09
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நாளை மறுநாள் (12ம்தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. பெண்களின் சபரிமலை
என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அஸ்வதி பொங்கல் வழிபாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டைய பொங்கல் வழிபாடு
13ம் தேதி நடக்கிறது. விழாவில் முதல் நாள் (12ம் தேதி) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலை 5 மணிக்கு சுமங்கலி பூஜை , 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது. இரண்டாம் நாள் காலை 8 மணிக்கு பஜனை , 10 மணிக்கு சிங்காரி மேளம், 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு, மதியம் 12 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 12.30 மணிக்கு தீபாராதனை, தொ டர்ந்து அன்னதானம் நடக்கிறது. மூன்றாம் நாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை , 6மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வா
கத்தினர் செய்து வருகின்றனர்.