காமாட்சியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2022 05:09
மேலூர்: மேலுார் மந்தைதிடலில் உள்ள காமாட்சியம்மன் கோயில் 44 ம் ஆண்டு திருவிழா துவங்கியது. இவ் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் நிறைவேறியவர்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சுற்றி வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். நாளை (செப்.11) கோயிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு சென்று பழனிக்கண்மாயில் கரைக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.