பூலாம்பாடி திரௌபதி அம்மன் கோவிலில் நிகுலம்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2022 10:09
பெரம்பலூர், பூலாம்பாடி ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவிலில் பிரித்தியங்காதேவி நிகுலம்பலா யாகம் மற்றும் 108 கலச பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் புணரமைக்கப்பட்டு கடந்த ஜுலை 6 ந்தே மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபூஜையும் அம்மனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜையும் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோவிலில் பிரித்தியங்காதேவி நிகுலம்பலா யாகம் மற்றும் 108 கலசபூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பூஜைக்கு டத்தோ.S.பிரகதீஸ்குமார் தலைமைவகித்தார்.கோவில் அறக்கட்டளை நிர்வாகி சூர்யபிரகாசம் முன்னிலை வகித்தார்.சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகத்தின்பலன்களை கூறி யாகத்தினையும் பூஜைகளையும் நடத்திவைத்தனர். இந்த யாகத்துல கலந்து கொள்ளும் போது திருமணத்தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிட்டும் வேலை வாய்ப்புமற்றும் பல்வேறு நன்மை உள்ளதால் பூலாம்பாடி, அரசடிகாடு ,கடம்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பெண்பக்தர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.மேலும் சிறப்பு யாக பூஜையில் மலேசியா பாஸ்கரன், மன்மணி, மணிகவுண்டர், ராஜ், மோகன், ராமதாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பூலாம்பாடி சதீஷ், கடம்பூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.