பதிவு செய்த நாள்
11
செப்
2022
06:09
அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த 15 வேலம்பாளையம், சிறு பூலுப்பட்டி அம்மன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு வலம்புரி ஸ்ரீ செல்வ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நாளை 12 ம் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி, இன்று 11 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 : 00 மணி முதல், இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், இரவு 8 : 00 மணிக்கு ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து, சயனாதி வாசம், எந்திர ஸ்தாபனம், சுவாமி பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாற்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை 12 ந் தேதி திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, விமான கும்பாபிஷேகம், முலாலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. 8:15 மணி முதல், மகா அபிஷேகம், அலங்காரம், கோ பூஜை, உபசார பூஜை, மஹா தீபாராதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.