ஆத்தூர் அருகே கீரிப்பட்டி: தேர்த்திருவிழா நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2022 01:09
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கீரிப்பட்டி கிராமத்தில் எல்லையம்மன், மாரியம்மன், விநாயகர் கோயில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் தேர்த் திருவிழா, கடந்த, ஆகஸ்ட் 23ம் தேதி துவங்கியது. கடந்த 7-ம் தேதி மாரியம்மன் தேர் திருவிழா நடந்தது. இந்த விழாவில் தேர் மீது விழா குழுவினர் அமர்ந்து செல்வதற்கு தடை விதிக்கும்படி, ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம் தனிநபர் யாரும் தேரின் மீது ஏறக்கூடாது என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தேர் திருவிழாவும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இன்று(செப்.,10) எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா காலை 10 மணி அளவில் துவங்க இருந்த நிலையில் தேர் மீது முக்கியஸ்தர்கள் ஏறக்கூடாது என இந்து அறநிலை துறை மற்றும் போலீசார் தெரிவித்து இருந்தனர். அதை விழா குழுவினர் ஏற்க மறுத்ததால் தேர் திருவிழாவை நிறுத்திவிட்டனர். இதையடுத்து கிராம மக்கள் நிறுத்தப்பட்ட தேர்வு முன் தேங்காய் உடைத்து வைத்து பூஜை செய்து வழிபாடு செய்து சென்றனர். தொடர்ந்து கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.