பதிவு செய்த நாள்
12
செப்
2022
05:09
சூலூர்: சூலூர், மதியழகன் நகர் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சூலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மதியழகன் நகரில் உள்ள பால விநாயகர் கோவில் பழமையானது. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து
நேற்று மாலை, 4:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு, சூலூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் தீர்த்தக்குடங்கள், முளைப்பாரி எடுத்து வரப்பட்டன. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. 9:00 மணிக்கு, புனிதநீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, பால விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மகா அலங்கார பூஜைக்குப் பின், அன்னதானம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஆவணி பிரம்மோற்சவ விழாவில் நாளை (செப். 13ல்) கொடியிறக்குதல் நடைபெறும். செப.14ல் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடையும். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.