கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது விக்னேஸ்வர பூஜை, சுதர்சன ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், மங்கல இசை, தீர்த்தம் தெளித்தல், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம கமிட்டி தலைவர் கணேசன், செயலாளர் கோவிந்தன், பொருளாளர் தங்கராஜ், பெரிய தனம் பால்ராஜ், மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். ஆண்டிபட்டி டி.எஸ்.பி., ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.