ஸ்ரீபெரும்புதுார் மூங்கிலியம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2022 04:09
ஸ்ரீபெரும்புதுார் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் சந்தவேலுார் கிராமத்தில் நுாறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ மூங்கிலியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையடுத்து நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீமூங்கிலியம்மன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் செல்லும் வழியில், இனிப்பு, வளையல், ஆடைகள் அடங்கிய சீர்வரிசை அம்மனுக்கு படைத்து மக்கள் வழிப்பட்டனர்.தேர் திருவிழாவை முன்னிட்டு கரகாட்டம், மேளவாத்தியம், சண்டி மேளம், வாணவேடிக்கை, கட்டை கூத்து நிகழ்வுகள் நடைபெற்றன.