பதிவு செய்த நாள்
14
செப்
2022
04:09
சென்னை, வானமாமலை, அஹோபிலம், காஞ்சி காமகோடி பீடம் ஆகிய மூன்று மடங்களின் பீடாதிபதிகளுக்கு மட்டும், கங்கை கொண்டான் மண்டபத்தில் பார்த்த சாரதி கோவில் சார்பாக, மூன்றாண்டிற்கு ஒருமுறை, சடாரி மரியாதை செய்யப்படுவது உண்டு.இந்த நிலையில், நாங்குநேரி வானமாமலை மடத்தின், 31வது பட்டத்து மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்த நிலையில், நேற்று பார்த்தசாரதி கோவிலில் மங்களாசாசனம் செய்தார்.அவருக்கு கங்கை கொண்டான் மண்டபத்தில் இருந்து சடாரி மரியாதையுடன் கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டார். அனைத்து சன்னிதிகளையும் ஜீயர் தரிசித்து மங்களாசாசனம் செய்தார்.இதையடுத்து, அத்யாபக கோஷ்டியினர், குடை, சாமரம் உள்ள கோவில் தளவாடங்களுடன் அவரை மடத்தில் விட்டு வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணைக் கமிஷனர் கவெனிதா செய்திருந்தார். நேற்று மாலை, ஜீயரின் பட்டணப் பிரவேசம் நடந்தது.