பழநி முருகன் கோவில் ரோப்காரில் புதிய பெட்டிகள் இணைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2022 09:09
பழநி: பழநி முருகன் கோவில் ரோப்காரில் புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டு செயல்பட துவங்கியது.
பழநி முருகன் கோவிலுக்கு சென்று வர விஞ்ச், படிப்பாதை, ரோப் கார் வசதிகள் உள்ளன. ரோப் காரில் மேலே செல்லவும், இறங்கவும் தலா நான்கு பெட்டிகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் புதிய வடிவமைப்புடன், பக்கவாட்டில் கதவை திறப்பது போல 10 பெட்டிகள் செய்யப்பட்டன. ரோப்காரில் பொருத்தி இயக்கும்போது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. அவற்றை சரி செய்து சில நாட்களுக்கு முன் இரண்டு பெட்டிகள் மட்டும் இணைத்து சோதனை ஓட்டம் நடந்தது.சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது எட்டு புதிய பெட்டிகள் இணைத்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.