காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் வெங்கடகிரியில் போலேரம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை முதல் இரவு வரை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். மிகவும் சக்தி வாய்ந்த,நம்பிக்கைக்குரிய போலேரம்மன் திருவிழா என்பதால் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெங்கடகிரியில் போலேரம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி ,சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசலு, திருப்பதி எம்பி குருமூர்த்தி உட்பட பலர் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பேசுகையில் இன்று தன்னுடைய சொந்த செலவில்( சாரே) சீர்வரிசை பொருட்களை வழங்கியது மிகவும் சந்தோஷத்தை அளித்ததாக தெரிவித்தார் .மேலும் அடுத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் திருப்பதி மாவட்டத்தில் வீற்றிருக்கும் வெங்கடகிரி போலேரம்மன், சூளூர்பேட்டையில் உள்ள செங்காளம்மன், திருப்பதியில் உள்ள தாதய்யகுண்ட கங்கை அம்மன், கனுபூரில் உள்ள முத்தியாலம்மன் இவர்கள் அனைவருக்கும் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானம் அறங்காவலர் குழு சார்பில் சீர்வரிசை பொருட்களை வழங்கும் விதமாக ஸ்ரீ காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி உதவியோடு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெரியப்படுத்தினார் .இவர்களுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சென்னீர்.குப்பம் சேகர், மதுசூதன் ரெட்டி , சந்திரா, முனி கிஷோர் , பாலகுரு சுனில் ,தேஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.