முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே தெற்குகாக்கூர் கிராமம் வரணவாசி அம்மன் முளைப்பாரி, அய்யனார் கோயில் குதிரை எடுப்பு,முனியப்பசாமி பொங்கல் விழா நடந்தது.இதனைமுன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.முனியப்பசாமி கோயில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.பின்பு காக்கூர் கிராமத்தில் இருந்து மண்ணால் செய்யப்பட்ட குதிரை,தவளும் பிள்ளைகள் ஊர்வலமாக கொண்டு வந்து அய்யனார் கோயிலில் வைத்து கண்திறப்பு செய்யப்பட்டு சிறப்புபூஜைகள் நடந்தது.வரணவாசி அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது.பின்பு முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமமக்கள் முளைப்பாரியை முக்கிய வீதிகளில் ஊர்வலமாக தூக்கிவந்து ஊரணியில் கரைத்தனர்.கிராமமக்கள் சார்பில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தது.