சிதம்பரம் நடராஜர் கோவில் ஆய்வுப்பணி நிறுத்தம் மீண்டும் 20 ஆம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2022 03:09
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் 12 வது நாளாக ஆய்வு பணியை அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வந்த நிலையில் மீண்டும் இடையில் நான்கு நாட்கள் ஆய்வு பணி நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள பழமை வாய்ந்த தங்க ஆபரணங்கள், தங்க நகைகள், வைடூரியங்கள், பொதுமக்கள் பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் தங்க நகைகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் கடலூர் மாவட்ட அறநிலைத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் மூன்றாம் கட்டமாக நகை சரி பார்ப்பு பணியை நடத்தி வந்தனர். நேற்று 12 நாளாக ஆய்வு பணிகளின் போது, ம2017 ஆண்டுக்கான கணக்குகள் பார்க்கப்பட்டதாகவும், இந்நிலையில் இன்று முதல் நான்கு நாட்கள் 19 ஆம் தேதி வரை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தப்படுவதாகவும் மீண்டும் 20 ஆம் தேதி ஆய்வுப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் 20 ஆம் தேதி நான்காம் கட்ட ஆய்வு பணி துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.