ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சேவை நேரம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2022 07:09
திருச்சி: 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது, அனைத்து திவ்யதேச பெருமாளையும் தரிசனம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம் வந்து செல்கிறார்கள்.
இந்த ஆண்டு புரட்டாசி மாத சனிக்கிழமைளில் ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாளின் சேவை நேர விவரங்கள் வரும் செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8 ஆகிய நாட்களில் காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் மற்றும் மாலை 6.45 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் சேவை நேரம் ஆகும். இந்த நாட்களில் விஸ்வரூபம், மற்றும் பூஜா காலங்களான நண்பகல் 12.00 முதல் மதியம் 2.00 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரையும் பொது ஜன சேவை கிடையாது. கடைசி புரட்டாசி சனிக்கிழமையான அக்டோபர் 15ந் தேதி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையும், சேவை உண்டு.