பதிவு செய்த நாள்
16
செப்
2022
10:09
நத்தம், நத்தம் அருகே பண்ணுவார்பட்டி ஊராட்சி பள்ளபட்டி விநாயகர், முத்தாலம்மன், அய்யனார், மதுரை வீரன் கோவில்களில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி செப்.14- பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தங்கள் நிறைந்த கலசங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கிராம சாந்தி, நிலத்தேவர் வழிபாடு, புனித மண் எடுத்தல், ருத்ர ஜெபம், வேத பாராயணம், கனி, மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம், நிறையவி விளித்தல், பேரொளி வழிபாடு, செப்.15 ருத்ர ஜெபம், வேத பாராயணம், கோபுர கலச பிரதிஷ்டை, பரிவார தெய்வங்களின் எந்திர ஸ்தாபனம், எண் வகை மருந்து சான்றிதழ் உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று மேளதாளம் முழங்க கடன் புறப்பாடு நடந்தது. பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, கருட தரிசனத்துடன் கோவில்களில் உள்ள கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., , ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், முன்னாள் எம்.எல் ஏ., ஆண்டி அம்பலம், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, முன்னாள் பேரூராட்சித் தலைவர் சிவலிங்கம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.