பரமக்குடியில் செப். 26 ல் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2022 11:09
பரமக்குடி: பரமக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களிலும் செப். 26 தொடங்கி நவராத்திரி கொலு பூஜை துவங்க உள்ளது.
இதன்படி பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில், ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில், அனுமார் கோதண்டராமசாமி, எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள், நயினார் கோவில் நாகநாதசுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் அருள்பாலிக்கும் தாயார், அம்பாள் மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரம் மற்றும் விஷேச தீபாராதனைகள் நடக்க உள்ளது. மேலும் கோயில்கள் உட்பட வீடுகளில் 9 படிகளை அமைத்து கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி பெண்கள் வீடுகளில் தரிசனம் செய்வர். அப்போது பஜனை பாடல்கள், கோலாட்டம் என களை கட்டும். தொடர்ந்து 9 நாள் விழாவில், அக். 4 சரஸ்வதி ஆயுத பூஜை விழா, அக். 5 அன்று விஜயதசமி நாளில் மகிஷாசுரன் என்ற அரக்கனை ஆதிபராசக்தி வதம் செய்யும் நிகழ்ச்சி கோயில்களில் நடக்க உள்ளது. இதனையொட்டி கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்படும்.