திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா மலைமேல் காசி விஸ்வநாதர் கோயிலில் சீரமைப்பு பணிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2022 04:09
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.10ல் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நடக்க உள்ளது. அதற்காக மலை மேல் உள்ள காசி விசுவநாதர் கோயிலில் சீரமைப்பு பணிகள் துவக்கியது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேல் புரட்டாசி மாதம் மலை மேல் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சுனை தீர்த்தத்தில் அபிஷேகங்கள் முடிந்து மாலையில் பூ பல்லக்கில் வீதி உலா நிகழ்ச்சிக்குபின் மூலவர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். அவ்விழாவிற்காக மலை மேல் உள்ள காசி விசுவநாதர் கோயிலில், துணை கமிஷனர் சுரேஷ் பணியாளர்களுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டு, கோயில் வளாகம், மலைப்பாறைகளில் சுத்தம் செய்யும் பணிகளை துவக்கி வைத்தார். காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் மலைப்பாறைகளின் அடிப்பகுதியிலுள்ள சுவாமிகளுக்கு அபிஷேகம், பூஜை நடத்துவதற்காக சுனை தீர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு நடை மேடை சீரமைக்கும் பணி, கோயிலில் காவி, வெள்ளை வர்ணம் பூசும் பணிகள் துவங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு நேற்று முதல் பணிகள் துவங்கின.