சிறுவாபுரி முருகன் கோவிலில் மண்டல பூஜை குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2022 07:09
ஊத்துக்கோட்டை,: சிறுவாபுரி முருகன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வரும் நிலையில், அதிகளவு பக்தர்கள் குவிந்ததால் நீண்ட, வரிசையில் காத்திருந்து மூன்று மணி நேரத்திற்கு பின், சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆரணி பேரூராட்சியை அடுத்துள்ள சிறுவாபுரி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் பங்களிப்புடன் கடந்த மாதம், கும்பாபிஷேகம் நடந்தது.தற்போது, மண்டல பூஜை நடந்து வருகிறது. இங்கு, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வர்.நேற்று செவ்வாய்க்கிழமை அதிகளவு வாகனங்களில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் கோபுரத்தின் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து, மூன்று மணி நேரத்திற்கு பின் சுவாமியை தரிசனம் செய்தனர்.