பதிவு செய்த நாள்
21
செப்
2022
07:09
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்களுக்கு கோவில் தல வரலாறு குறித்து தெரிவதில்லை. இதனால் பக்தர்கள் கோவில் வரலாறு குறித்து அறிவதற்கு வசதியாக மலைக்கோவிலில் ஆன்மிக புத்தக நிலையம் அமைக்க வேண்டும் என, கோவில் துணை ஆணையர் விஜயா, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து, ஆணையரின் உத்தரவுப்படி, மலைக்கோவில் தேர் வீதியில் அன்னதான கூடம் அருகில், கோவில் நிதியில் இருந்து, 8.30 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆன்மிக புத்தக நிலையம் ஏற்படுத்தப்பட்டது.இந்த புத்தக நிலையத்தை, கோவில் கண்காணிப்பாளர்கள் வித்யாசாகர், கலைவாணன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.