பதிவு செய்த நாள்
21
செப்
2022
07:09
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த ஆசூர் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் திட்டு குறித்து, தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் வெற்றித் தமிழன் கூறியதாவது:
பண்டைய காலங்களில் வாழ்ந்த மனிதர்கள் இறந்த பின் அவர்களின் உடல்களை பல விதங்களில் புதைத்து உள்ளனர்.குறிப்பாக, பெரிய சுடுமண் பானையில், வைத்து புதைக்கும் முறைக்கு, முதுமக்கள் தாழி என அழைத்து வந்தனர். வட்ட வடிவில் சிறிய பாறாங்கற்கள் மீது, பெரிய பாறை போட்டு மூடுவதற்கு, கல் திட்டை என, அழைத்து வந்தனர்.
நிலத்தில் பாதி பாறாங்கல்லும், மண்ணில் பாதி வட்ட வடிவில், பாறங் கற்கள் அடுக்கி விட்டு, அதன் மீது பாறைபோட்டு மூடினால், கல் பதுக்கை என, அழைத்து வந்தனர்.வாலாஜாபாத் அடுத்த, ஆசூர் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, பழைமை வாய்ந்த கல்திட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, கலைந்த நிலையில் காணப்படுகிறது. இதை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும் என, பல தரப்பினர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.