Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நோய் தீர்க்கும் மந்திர விபூதி மனம் புத்துணர்வு பெற எந்த பதிகம் ...
முதல் பக்கம் » துளிகள்
பெருமாளுக்கு கொலுசு காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2022
03:09


காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் கிராமத்தில் தாமோதரப்பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு வழிபட்டு குழந்தைப்பேறு அடைந்தவர்கள் கொலுசு காணிக்கை செலுத்துகின்றனர்.
கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என 12 திருநாமங்கள் பெருமாளுக்கு விசேஷமானவை. இதில் இத்தலம் தாமோதரப் பெருமாளுக்கு உரியதாக திகழ்கிறது. ஆயர்பாடியில் வாழ்ந்த நந்தகோபர் – யசோதை தம்பதியின் மகனாக கண்ணன் என்னும் பெயரில் வளர்ந்தார் மகாவிஷ்ணு. பாலகனான கண்ணன் ஆயர்பாடியில் பலவித விளையாடல்கள் செய்தருளினார். அதில் வெண்ணெய் திருடுதலும் ஒன்று. இதனால் கோபம் கொண்ட கோபியர்கள், கண்ணனைக் கண்டிக்கும்படி முறையிட்டனர். அவன் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்க, கயிறால் பிணைத்து ஒரு உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்தாள் யசோதை. அப்போது அவனது வயிற்றில் கயிற்றின் தடம் ஏற்பட்டது. அதனால் ‘தாமோதரன்’ எனப் பெயர் பெற்றான். ‘தாம’ என்றால் ‘கயிறு’ அல்லது தாம்பு. உதரன் என்றால் ‘வயிறு’. அதாவது ‘கயிறால் கட்டப்பட்ட வயிறை உடையவன்’ என்பது பொருள். இந்த தாமோதரப் பெருமாளின் தரிசனம் பெற விரும்பிய மகரிஷிகள் பலர் இங்கிருந்த காட்டில் தவமிருந்தனர். அதன் பயனாக பெருமாள் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். 1000 ஆண்டுகள் பழமை மிக்க இங்கு மூலவர் தாமோதரப்பெருமாள் சங்கு, சக்கரம் ஏந்தியபடி நின்ற கோலத்தில் இருக்கிறார். அபிேஷகத்தின் போது பெருமாளின் வயிற்றில் தழும்பைக் காணலாம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று ராஜ அலங்கார சேவை நடக்கும். திருமாலழகி என்னும் பெயரில் தாயார் இருக்கிறாள். வெள்ளிக்கிழமையில் நெய் விளக்கு ஏற்றி தாயாரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். வில்வம், புன்னை தலவிருட்சமாக உள்ளன. விபுல சரஸ், சர்ப்ப  தீர்த்தங்கள் இங்குள்ளன.     
எப்படி செல்வது
* சென்னை – வேலுார் நெடுஞ்சாலையில் 85 கி.மீ.,
* காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ.,

 
மேலும் துளிகள் »
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar