* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும். * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. துணிந்து முயற்சி செய். * முதலாளியின் குணம் அறிந்தவர் பணியை வெற்றிகரமாக முடிப்பார். * நல்லவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. தீயவர்களுக்கு உதவாதே. * மென்மையாகப் பேசு. உனக்கு விரோதிகளே இருக்க மாட்டார்கள். * தனக்கு நேர்ந்த அவமானத்தை விவேகம் உள்ளவன் வெளியே சொல்ல மாட்டான். * ஆசிரியர், தலைவன், நண்பன், அறிவாளி, முட்டாள் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்யாதே. * சந்தேகத்துடன் ஒரு செயலை தொடங்காதே. * உன் ரகசியத்தை பிறருடன் பகிராதே. அது உன்னை அழித்துவிடும். * உன் பலவீனத்தை குறிவைப்பவன் உண்மையான நண்பன் அல்ல. * சிங்கத்தின் தலைமையின் கீழ் இருக்கும் கழுதை வெல்லும். கழுதையின் தலைமையின் கீழ் இருக்கும் சிங்கம் தோற்கும். * வரவு, செலவு, நேரம், நண்பர்கள், இடம் சரியாக அமைந்தால் உனக்கு வெற்றி உண்டு. * எதற்கெடுத்தாலும் காரணம் தேடாதே. அப்படி செய்தால் நீ தலைவன் ஆகலாம். * ஒவ்வொரு நட்பின் பின்னாலும் கொஞ்சம் சுயநலம் இருக்கும்.