மழை வேண்டி மானாவாரி காடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2022 02:09
கம்பம்: கம்பம் நகருக்கு - மேற்கு திசையில் உள்ள மானாவாரி காடுகளில் மழை வேண்டி ஒக்கலிகர் சமுதாயம் சார்பாக பொங்கல் வந்து கன்னிமார் தெய்வங்களுக்கும், கருப்பசாமிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
கம்பத்திற்கு மேற்கு திசையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி காடுகள் உள்ளன . என்னதான் 18 ம் கால்வாயில் தண்ணீர் திறந்தாலும், மழை பெய்தால் தான் இந்த நிலங்களில் சாகுபடி செய்ய முடியும். இல்லையென்றால் வானம் பார்த்த பூமியாகத் தான் கிடக்கும், மழை வேண்டி ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மானாவாரி நிலங்களில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் குலாலர் சமுதாயத்தினரின் வீட்டிலிருந்து சுவாமி புறப்பட்டு ஆலமரத்து குளம், பந்தல் கரை, கும்ப புளி, ஏகலுத்து, எல்லைக்கரை ஆகிய ஐந்து புலங்களுக்கு சென்று ஏழு கன்னிமார் சகோதரி தெய்வங்கள், காவல் தெய்வம் கருப்பசாமிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கிடாவெட்டி அன்னதானம் படைக்கப்பட்டது. மழை வேண்டி பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் திரளாக விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர்.